Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : வாடகை செலுத்த வேண்டாம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அனைத்து தொழிலாளர்களிடமும் வாடகை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற உத்தரவை பிறப்பித்திருந்தார். அதில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் வீட்டு வாடகை கேட்க வேண்டாம். அவர்களின் வாடகையை அரசு கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தலைமை செயலாளரும் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு இது போன்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களை வெளியே செல்லுங்கள் என துன்புறுத்தக்கூடாது. அவர்கள் வீட்டிலிருக்க  ஒத்துழைக்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களிடமும் ஒரு மாதம் வீட்டு வடக்கை வசூலிக்கக் கூடாது, வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடமும் வாடகை  வசூலிக்க கூடாது, வீட்டை காலிசெய்ய உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த கூடாது.மீறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |