கொரோனா வைரஸ் இந்தியாவையே முடக்கியுள்ளது. இதன் எதிரொலியால், நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10,000 பேர் 500 கிலோ மீட்டர் நடைப்பயணமாக உத்தரப் பிரதேச மாநில எல்லையான டோல்பூருக்கு வந்தடைந்துள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் போலீசார் அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராகேஷ் குமார் கூறுகையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்றும், உள்துறை அமைச்சரின் உத்தரவிற்கு முதல்வர் காத்திருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.