Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலாளர் சண்முகம் கறிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார். ஆளுநர் , முதல்வர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம் கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதில், நாளை முதல் 6 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளது. இறைச்சிக் கடைகளை நகருக்கு வெளியே அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளை மாற்ற கடைக்காரர்கள் மறுப்பு தெரிவித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தார். முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆளுநர் பாராட்டினார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

 

Categories

Tech |