டெல்லியில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று முதல்வர் சார்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் 97 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாகவும் அதில், 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார். 41 பேர் வெளிநாடுகளுக்கு பயண வரலாற்றைக் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, 22 பேர் வெளிநாட்டு பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவித்துள்ளார். தற்போது, டெல்லி முழுவதும் சமூக பரிமாற்றம் முழுவதும் தடைபட்டுள்ளது என தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த மதக்கூட்டத்தில் வெளிநாடுகள் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்றோர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,” மார்கஸ் மசூதியில் கலந்துகொண்ட 1,548 பேர் தற்போது வெளியே கொண்டுவரப்பட்டதாகவும், அதில் 441 பேருக்கு நோய் தோற்று அறிகுறி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என கூறினார்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் கூறியுள்ளார். அறிகுறிகள் அல்லாத 1,107 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு லெப்டினன்ட் கவர்னருக்கு கடிதம் எழுதியதாகவும், அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். எந்தவொரு அதிகாரிகளிடமும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.