Categories
தேசிய செய்திகள்

நான் தான் கொரோனா… தேவையில்லாமல் சுற்றினால் கொன்னுடுவேன்… காவலர்கள் விழிப்புணர்வு!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் உருவமுடைய தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது.

ஆனால் இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, காவல் துறையினர் பலரும் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி அதனுடைய தாக்கம் புரியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களிடம் காவலர்கள் கொரோனா வைரஸ் உருவம் கொண்ட தலைக்கவசம்  அணிந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த காவலர்கள் எனது பெயர் கொரோனா என்றும், தெருவில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்கள் மீது நான் தாக்குதல் நடத்தி அவர்கள் மரணத்திற்கு காரணமாக அமைவேன் என்றும் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்கனவே சென்னையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் இதுபோன்று கொரோனா வடிவமுடைய ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |