தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது .
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1131 பேரில், 515 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள 50 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இன்றுமட்டும் தமிழகத்தில் புதியதாக 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது .