Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் CBCID விசாரணைக்கு மாற்றம்….!!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை CBCID விசாரணைக்கு DGP உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் முதலில் ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான்  இந்த விவகாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக அந்தப் பெண் வீட்டில் வந்து தெரிவித்து இதுகுறித்து காவல் நிலையத்தில்  கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது.மேலும் இந்த கும்பலின் செல்போனில் இருந்த படங்களின் அடிப்படையில்  இவர்களின் தொடர் அட்டூழியம் வெளிஉலகிற்கு தெரியவந்தது.

மேலும் இந்த பாலியல் குற்றவாளிகள் வெளியிட்ட 2 வீடியோவில் பெண்கள் பெண்கள் அழுது கதறுவது போன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  . மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும்  எழுந்தது . இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்நிலையில் இந்த வழக்கை CBCID போலீஸ் விசாரணைக்கு D.G.P உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |