கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டதில் 19 பேர் குணமடைந்து இருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தபடியாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் குணமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.