மகரம் ராசி அன்பர்களே..! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் தயவுசெய்து சொந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்ப செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று கூடுமானவரை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும்பொழுது இறைவழிபாட்டு உடனே செய்யுங்கள். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு இன்று இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மீண்டும் ஒருமுறை கவனமாகவே இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள்.
சிறு பிள்ளைகளிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்