Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..தெளிவான சிந்தனை வேண்டும்.. மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உறுதியுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணியில் சிலவற்றை இன்று நிறைவேற்றுவீர்கள். தொழில் அபிவிருத்திக்கான பணவரவும் கிடைக்கும். உறவினர்கள் நல்ல சமயத்தில் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண தடை விலகி செல்லும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று  தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் விலகி செல்லும்.

எதிலும் தெளிவான சிந்தனை வேண்டும். குழந்தைகள் பற்றிய கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். அவர்களின் நலனுக்காக நீங்கள் என்று பாடுபடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |