ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களின் உதவி பரிபூரணமாகவே உங்களுக்கு கிடைக்கும். அவர்களின் உதவி ஊக்கத்தையும் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை ஓரளவு சிறப்பை கொடுக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு இன்று ஓரளவு சிறப்பான நாளாகவே இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழலும் காணப்படும். கணவன் மனைவியிடையே மனவருத்தங்கள் நீங்கும்.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொஞ்சம் இருக்கும். வீண் செலவு குறையும், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்