Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… சீரான ஓய்வு அவசியம்… பிரச்சனைகள் குறையும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசக்கூடும். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை நீங்கள் பாதுகாக்க முடியும். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். முக்கிய பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு ரொம்ப அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்து ஓரளவு விலகிச்செல்லும் போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகளும் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் பிரச்சினைகள் கொஞ்சம் குறைய கூடும், பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினர் இடம் அன்பு தொல்லைக்கு ஆளாக கூடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைக்கூடும் நாளாகவே இருக்கும். திருமண தடை விலகி சென்று சுபகாரியப் பேச்சுக்கள் நடப்பதற்கான வாய்ப்பு இன்று அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று புதன் கிழமை என்பதால் இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

 அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |