Categories
அரசியல்

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் கொரோனா : மாவட்ட வாரியாக முழு பட்டியல் ..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 124ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1238 ஆக அதிகரித்துள்ள நிலையில் 123 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 30யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 234 பேருக்கும், மகாராஷ்டிராவில் 216 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.

France's coronavirus death toll rises by 186 in a day, lockdown ...

தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதில், ஒருவர் உயிரிழந்து 6 பேர் குணமடைந்துள்ளனர். 117 பேர் 19 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், திருநெல்வேலியில் 23 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

மாவட்டம் 

 சிகிச்சை பெறுபவர்கள்

சென்னை  28
திருநெல்வேலி 23
ஈரோடு  19
நாமக்கல்  18
சேலம்  6
மதுரை  6
கன்னியாகுமரி  5
கோவை  5
விழுப்புரம்  3
வேலூர்  2
விருதுநகர்  1
திருவண்ணாமலை  1
திருப்பூர்  1
திருப்பூர்  1
தூத்துக்குடி  1
தஞ்சாவூர்  1
கரூர்  1
காஞ்சிபுரம்  1
செங்கல்பட்டு  1

 

Categories

Tech |