Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு தான் – முதல்வர் பேட்டி …!!

சென்னை சாமித்தோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். 

சென்னை சாமிதோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு மட்டும் தான். அம்மா உணவகங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்களுக்கு கை கொடுக்கிறது. அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் பேர் உணவு அருந்துகின்றனர்.

நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் ...

தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,131 பேர் பங்கேற்றனர். டெல்லி மாநாடுக்கு சென்றவர்கள் விவரம் தெரியாததால் தாமாகவே அரசுக்கு தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்தால் உரிய சிகிச்சை வழங்கப்படும். கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட வேண்டும்.

தமிழகத்தில் 15,000 படுக்கை வசதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம், நோயின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர் என்று முதல்வர் தெரிவித்தார். பிப்ரவரி மாதம் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேவைப்பட்டால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் சோதிப்போம் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |