Categories
உலக செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்த பழைய சிகிச்சை முறையை கையில் எடுத்த அமெரிக்கா.!! தானம் வழங்க முன்வந்த மக்கள் …!

கொரானா பாதிப்பினால்  உலகம் முழுவதும்  நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.  இதனை கட்டுப்படுத்த  சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி  வருகின்றனர்.

இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும்  ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்கா தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரானாவால்  ஏற்கனவே குணம் அடைந்தவர்களின்  பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெறுபவர்களுக்கு வழங்கும்  முறை தான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படும்.

அதாவது கொரானாவின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் இம்யூனோகுளோபின்கள் வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி அடைந்திருக்கும், இதனால் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அதை  செலுத்தும் போது அவர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை முறை குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அம்மை போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும்  முன்பு  இது போன்ற சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது.  இதனால் இந்த சிகிச்சை முறையின் பக்கம் தற்போது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது.  அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு சுகாதார நிறுவனம் இதைப் பயன்படுத்தி பார்க்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பலரும் தங்களது ரத்த பிளாஸ்மாவை தானம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

Categories

Tech |