தங்களின் செல்ல செல்ல பூனைகளுக்கு பைக் ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொழுதுபோகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்பைக் ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டுள்ளார். இதனை கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகளையும் அதேபோல் முடியைக் கத்தரித்து பல வண்ணம் பூசி தங்களின் பொழுதை போக்குகின்றனர்.