Categories
தேசிய செய்திகள்

கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு 8.30 மணிக்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 216 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 230 ஆக அதிகரித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் 101 பேரும், டெல்லியில் 97 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆந்திராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 44 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 43 பேருக்கு புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |