குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் எந்த வயதில் ஏற்படுகின்றது எதனால் ஏற்படுகின்றது என்பது குறித்த தகவல்
6 மாதத்தில் குழந்தைகள் ஆட்டிசத்தில் பாதிக்க பட்டுள்ளனரா என்பதை அறிய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஒன்றில் இருந்து இரண்டு வயதிற்குள் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இல்லையா? என கண்டறிய படுகின்றனர். முறையான பயிற்சியின் மூலமும் மருத்துவத்தின் மூலமும் மூன்று வயதிலேயே குழந்தைகள் ஆட்டிசத்தில் இருந்து விடுபடுகின்றனர். நன்றாக படிக்கின்றனர்.
பெரும்பாலான பகுதிகளில் 3 வயதிற்கு மேல் ஆகியும் இந்தத் திறன்கள் வளரவில்லை என்னும் பொழுது மேலும் மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகின்றது. தந்தை தாய் என இருவரும் பணிக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகளுடன் அதிகம் பேச ஆள் இல்லாத சமயத்தில் குழந்தைகள் அமைதியாக காணப்படுகின்றனர். உற்சாகமின்றி காணப்படும் அந்த குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.