Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தை நடத்திய 7 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு… ஒருங்கிணைப்பாளரை தேடிவரும் டெல்லி போலீஸ்

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணித்தும் வருகிறது தமிழக சுகாதாரத்துறை. அதில் 67 பேர் கொரோனா பாதித்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல, தெலுங்கானாவில் இறந்த ஆறு பேரும், காஷ்மீரில் இறந்த ஒருவரும் இந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த கொள்கை பரப்பு கூட்டத்தின் கூட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த நிலையில் மசூதி நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நிஜாமுதீன் மார்கஸ் மசூதியின் ஒருங்கிணைப்பாளர்கள் 7 பேர் மீது டெல்லி அரசாங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளது. டாக்டர் ஜீஷன், முப்தி ஷெஜாத், எம் சைஃபி, யூனஸ், மற்றும் மொஹமட் சல்மான், மவுலானா சாத், முகமது அஷ்ரப்பின் ஆகியோர் ஆவர். இதில் மவுலானா சாத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், இவர் கடந்த மார்ச் 28ம் தேதியில் இருந்து காணவில்லை என்றும், மவுலானவை தேடி வருவதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ” இந்த மாநாடு நடத்தியதிலும், மக்களைத் தங்க வைத்ததிலும் எந்த விதமான சட்டத்தையும் மீறவில்லை என ஒருங்கிணைப்பாளர் மவுலானா சாத் கூறியுள்ளார்.

Categories

Tech |