பச்சிளம் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் தள்ளி போடுவதால் பிரச்சனையில்லை. கட்டாயம் என்றாலும் தள்ளி போவதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பச்சிளம் குழந்தைகளை இந்த நேரத்தில் வெளியே கொண்டு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயரும் அபாயம் எழுந்துள்ளது.