Categories
அரசியல்

1,08,922 வழக்கு…. 1,25,793 பேர் கைது… ரூ.39,36,852 வசூல்…. 7 நாளில் மாஸ் காட்டிய தமிழக போலீஸ் …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Janata Curfew in Tamil Nadu: தமிழகத்தில் ஊரடங்கு ...

முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,08,922 வழக்கு பதிவு செய்த போலீசார் 1,25,793 பேரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில்  விடுவித்துள்ளனர். குறிப்பாக தடையை மீறி வாகனத்தை ஓட்டியதாக 85, 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து போலீசாரும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இதுவரை 39,36,852 ரூபாய் அபராதமாக வசூல் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

 

Categories

Tech |