கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் .
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் நாட்டு மக்களை காக்க போராடுகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பனியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு/ தனியார் என்ற பாகுபாடு கிடையாது என்றும் அவர் கூறினார். டெல்லியில் இதுவரை 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.