மே மாதம் நடக்கவிருந்த கூட்டு நுழைவுத் தேர்வுகளை (JEE) ஐஐடி டெல்லி ஒத்திவைத்துள்ளது. கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிமாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐஐடி டெல்லி நடத்தும் கூட்டு நுழைவுத் தேர்வு தேதியை ஒத்திவைத்துள்ளது. அதன்படி மே மாதம் 17ம் தேதி நடக்கவிருந்த JEE – அட்வான்ஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. JEE – Main தேர்வுக்கு பின்னர் அந்த தேர்வு நடத்தப்படும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்அறிவித்துள்ளது. டெல்லியில், இதுவரை கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. அதில், 53 பேர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மர்கஸ் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.