Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… நிதானம் ரொம்ப அவசியம்… சாதகமான பலன் அடைய கூடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் என்பது ரொம்ப அவசியம். பழைய கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கப் பெறும். நல்ல நண்பர்கள் சாதகமான பலனை இன்று நீங்கள் அடையக்கூடும்.

பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் கொஞ்சம் வரக்கூடும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அஜீரண கோளாறு போன்றவை கூட வரக்கூடும், பார்த்துக் கொள்ளுங்கள் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. காரியங்கள் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |