கன்னி ராசி அன்பர்களே..! கடந்த இரண்டு நாட்களாகவே இருந்த அலைச்சல் பிரச்சனைகள் அனைத்துமே உங்களுக்கு சரியாகும். கடனாக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் வியாபாரத்தில் போட்டிகளும் பொறாமைகளும் குறையும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். புதிய பொருட்கள் சேரும் சிலருக்கு வீடு மனை வாங்கக்கூடிய கனவுகள் அவ்வப்போது வந்து செல்லும்.
உத்தியோகம் செய்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் ரொம்ப நல்லது. உங்களின் பெயர் புகழ் யாவும் உயரக்கூடிய காலம் இருக்கும் காலமாக இன்றைய நாள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாகவே செல்லும். எப்பொழுதும் சொல்வது போலவே சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்