வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி அவர்களது கட்சி போட்டியிடப் போவதாகவும் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40.5 சதவீதத்தை பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குறித்த பதட்டமும் அது குறித்த விறுவிறுப்பான கூட்டணி சம்பவங்கள் மற்றும் வாக்குறுதிகள் மற்றும் புதிய புதிய கட்சிகள் என தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் கூட்டணி இன்றி தனித்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார் இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலத்தில் தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லாமல் அம் மாநில கட்சிகளும் சுவையாகவும் பலர் தேர்தலில் களம் காண தயாராகியிருந்தனர் இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது கட்சிகட்சி போட்டியிடப் போவதாகவும் அந்த தேர்தலில்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் நாடாளுமன்ற அவையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஆனது முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டிப் பேசினார் மேலும் அந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களது கட்சி சார்பில் 40 சதவீதத்திற்கும் மேல் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி தேர்தலில் களம் காண போகிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார் இதனைத் தொடர்ந்து பல்வேறு பாராட்டுக்கள் மம்தா பானர்ஜிக்கு பிற கட்சி தலைவர்கள் அளித்து வருகின்றன.