தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் ஆதாயத்தை பெறுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள், உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அன்பாக பேசுங்கள். யாரிடமும் இன்று கோபம் மட்டும் படவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாகவே செல்ல வேண்டும்.
நிதி மேலாண்மை கையாளும் போதும் தேவைக்காக கொஞ்சம் கடன் வாங்கவேண்டும். தயவுசெய்து கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வெளியூர் வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். எதிர்பாராத வகையில் சில லாபங்களும் இன்று கிடைக்கக்கூடும். கொடுக்கல்-வாங்கலில் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்