Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான வெங்காயம் பூண்டு குழம்பு…!!

தேவையான பொருட்கள்

வெங்காயம்                 –  10

புளி                                   –  எலுமிச்சை பழ அளவு

பூண்டு                             –  15

சாம்பார் பொடி         –  4 மேசைக்கரண்டி

நல்லெண்ணெய்       –  4 மேசைக்கரண்டி

பெருங்காயம்             –  1/2 தேக்கரண்டி

வெந்தயம்                     –   1/2 தேக்கரண்டி

கடுகு                               –  1 தேக்கரண்டி

கறிவேப்பிலை           –  சிறிதளவு

உப்பு                                –  தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் புளியை நன்றாக வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வானொலி ஒன்றை அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடுகு வெடித்ததும் வெந்தயத்தை சேர்க்கவும்.
  • அதனுடன் கறிவேப்பிலை பெருங்காயம் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  • இறுதியாக வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் எண்ணெய் பிரிந்து வருகையில் இறக்கிவிடவும்.
  • சுவைமிக்க வெங்காயம் பூண்டு குழம்பு தயார்.

Categories

Tech |