Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வயிற்று புண் ஆற்றும் சத்தான சிவப்பு அரிசி தேங்காய் பால் கஞ்சி..!!

வயிற்றுபுண்னை ஆற்றும் சத்தான சிவப்பரிசி, தேங்காய் பால் கஞ்சி செய்யவது பற்றி பார்ப்போம்..!

தேவையான பொருட்கள்:

பூண்டு                                         – 20 பல்

சீரகம் மற்றும் வெந்தயம்  –  ஒரு ஸ்பூன்
சுக்கு                                             – சிறிய துண்டு
உப்பு                                             – தேவையான அளவு
சிவப்பு அரிசி                           – 1 கப்
தேங்காய்ப் பால்( முதலில் எடுப்பது)   –  ஒரு கப்
தேங்காய் பால் ( இரண்டாம் முறை எடுப்பது ) – ஒரு கப்

செய்முறை:

முதலில் சிவப்பு அரிசியை எடுத்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்  தேங்காய் பால் இரண்டு, மூன்று முறை முதலாக பால் எடுத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் சிவப்பு அரிசி போட்டு அதோடு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் ஊற்றி அதோட ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி, பூண்டு, சீரகம், வெந்தயம், பொடியயாக்கி வைத்திருக்கும் சுக்கு பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடவேண்டும். அனைத்தும் நன்றாக குலையும் அளவிற்கு வெந்ததும்  இறக்கி வைத்துவிட வேண்டும். பின்னர் அதில் நாம் முதலில் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து ஊற்றி பரிமாற வேண்டும்.

இதை நாம்  தினமும் காலை உணவாக எடுத்துக் கொண்டால் வாய்ப்புண் மற்றும் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.  இதனால் இதை செய்து சாப்பிட்டுங்கள்..!

Categories

Tech |