கொரோனா தொற்றால் 150 பேர் குணமடைந்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 936,170 பேர் பாதித்துள்ளனர். 47,249 பேர் உயிரிழந்த நிலையில் 194,578 பேர் குணமடைந்துள்ளனர். 694,343 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,612 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 215,300 பேர் பாதிக்கப்பட்டு 5,110 பேர் உயிரிழந்துள்ளார். அதே போல இத்தாலியில் 110,574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதில் 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்பெயினில் 104,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 9,387 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1764 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 150 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.