மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய அனுபவ அறிவு கைகொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய தொடர்பு கிடைக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு இன்று சலுகை கிடைக்கும் நாளாகஇருக்கும். பெண்களின் நகைகளைத் தயவு செய்து கடனாக கொடுக்க வேண்டாம். இன்று புதிய நபர்களின் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை கொடுக்கும். வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து தவிர்க்கவும். இன்று கேளிக்கைகளில் நாட்டம் செல்லும். குழந்தைகளுடன் அன்பாக இருப்பிர்கள் அவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்று எடுக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி இருக்கும். செய்தொழில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கும்.
எதைப்பற்றியும் தயவுசெய்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அது போலவே இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே அமையும.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்