Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகமான பருத்தி சாகுபடி… நல்ல விலை போகுமா?… விவசாயிகள் ஏக்கம்..!!

குண்டடம் பகுதியில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிடி ரக பருத்தி சாகுபடி செய்துள்ளதால்  நல்ல  லாபம் கிடைக்கும்  என விவசாயிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்கள் .

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னரே கரிசல் மண்ணில் அதிகளவில் விளைச்சல் கிடைக்குமென்று  விவசாயிகள் பருத்தியை பணப்பயிராக கருதி சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் மற்றும் பருத்தி பறிக்க ஆட்கள் கிடைக்காததால் மேலும் உரிய விலை இல்லாத போன்ற காரணத்தால் அப்பகுதியில் பருத்தி சாகுபடி படிப்படியாக குறைந்து வந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள  விவசாயி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குண்டடம் பகுதியில் இந்த ஆண்டு சிங்காரி பாளையம்,எரகாம்   பட்டி , ஓட்டபாளையம் ,உப்பாறு அணை, பனைமரத்து பாளையம் , தேர் பாதை ,கெத்தல்ரேவ் உள்ளிட்ட பல கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளார்கள் .இதனிடையே சிங்காரி பாளையத்தை சேர்ந்த விவசாயி கூறும்போது, பல வருடங்களுக்கு பின்னரே தாங்கள் இந்த ஆண்டு ஓரளவுக்கு பருத்தி சாகுபடி செய்துள்ளோம்  என கூறினார் .

ஆனால் முன்மாதிரி இல்லாமல் இந்த ஆண்டு பிடி ரக பருத்தியை சாகுபடி செய்துள்ளோம் . அதுமட்டுமல்லாமல் பிடிரக  பருத்தியில் காய்ப்புழுக்கள் தாக்கம் அதிகம் இல்லை எனவும்  இருப்பினும் நிறைய பூச்சிகள் இருப்பதாகவும் பருத்தியில் தொடர்ந்து ஆறு முறை மருந்து தெளிக்க வேண்டியு ள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும்  உரம், உழவு, ஆட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் செலவு செய்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு பருத்தி செடியில் நல்ல முறையில் காய்கள் உள்ளதாகவும்  பனிப்பொழிவின்  பாதிப்பு இல்லையென்றும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்  அவர் கூறினார்.

அதேப்போல் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என்றால்  நல்ல லாபமும் கிடைக்கும் . மேலும் பருத்தியில் நன்றாக விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு 17 குவின்டால் பருத்தி மகசூல் கிடைக்கும் என்றும்  விவசாயி கூறியுள்ளார்

Categories

Tech |