தலைக்கறி குழம்பு தேவையான பொருள்கள் :
சுத்தம் செய்த ஆட்டுதலை – 1 வெட்டியது
மல்லி விதை – 2 தேக்கரண்டி
தேங்காய் – அரைமூடி
வெங்காயம் – 2
தக்காளி – 3
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஆட்டின் தலையை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சி ஜாரில் மல்லி விதை, தக்காளி, தேங்காய், வெங்காயம், சீரகத்தை நன்கு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்த சீரகம், மல்லியை போட்டு வதக்கி, பின்பு நறுக்கிய தலைக்கறியை போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி, அதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கினால் சுவையான தலைக்கறி குழம்பு ரெடி.