Categories
மாநில செய்திகள்

கல்வித் துறை அமைச்சர்… கே ஏ செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்…!!

கே ஏ செங்கோட்டையன் அரசியலில் வகித்த பதவிகள் பற்றி இந்த தொகுதியில் பார்ப்போம்.

கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர்  கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஈரோடு மாவட்டம்,  கோபிச்செட்டிப்பாளையம்  அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டி பாளையத்திலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக செயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார்.

தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

தமிழ்நாட்டின் பதினான்காவது  சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர்.

2017 ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 

 

Categories

Tech |