Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி கஞ்சி… உடம்பிற்கு குளிர்ச்சியூட்டும் ரெசிபி…!!

வாழைபழம் மற்றும் ப்ளூபெர்ரிகஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்                   – 50 கிராம்
பால்                     – 300 மி.லி
வாழைப்பழம் – 2 (மசித்தது)
ப்ளூபெர்ரி        – 70 கிராம்
சர்க்கரை           – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்ததும், அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

பின் வேக வைத்த ஓட்ஸ்சுடன், சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறியபின், அதனுடன்   வாழைப்பழம் மசித்து சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்பு  அதனை இறக்கி, அதில் ப்ளூபெர்ரியை சேர்த்து பரிமாறினால் சுவையான மற்றும்  ஆரோக்கியத்தைத் தரும் வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி கஞ்சி ரெடி.

Categories

Tech |