குறைவான பால் மற்றும் சர்க்கரை இருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்து விடலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது புளியமரத்தடி பால்கோவாதான்.நம் முன்னோர்கள் பாரம்பரிய முறையில் பால்கோவாவை புளியமர விறகுகளைக் கொண்டு பெரிய பாத்திரங்களில் செய்தார்கள்.அதனால்தான் என்னவோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போதும் கூட பால்கோவா என்றால் அவ்வளவு பிரசித்தம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, மத்திய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. இதை செய்ய நேரம் அதிகம்,ஆனால் சுவையோ அலாதியானது.
செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 2 லிட்டர்
ஏலக்காய்தூள் – 2 தேக்கரண்டி
நெய் – 10 மேஜைகரண்டி சர்க்கரை – 1 கப்
எப்படி செய்வது:
அடிகனமான பாத்திரத்தை எடுத்து அதில் முழு கொழுப்புள்ள இரண்டு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சவும். பால் கொதித்து வரும் போது , 30 நிமிடம் மிதமான தீயில், பாலை நன்றாக காய்ச்சவும். பால் பாதியாகும் வரை காய்ச்சி, பின்னர் சர்க்கரை சேர்த்து (தேவைக்கேற்ப) அடி பிடிக்காமல் கிளறவும்.சிறிது நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.பின்பு கோவா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும் .மேலும் சுவையூட்ட குங்குமப்பூ சேர்த்து கொண்டால் சுவையான பால்கோவா தயார்.