விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல் பேசும்பொழுது கூறியுள்ளதாவது, விக்ரம் வெற்றிக்கு நான் காரணம் என சொல்லிவிட முடியாது. உடன் நின்றவர்களால் தான் வெற்றி சாத்தியமானது. பத்து வருடத்தில் நான் நடித்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் விக்ரம் தான். இப்படத்தின் வெற்றி சுலபமாகக் கிடைத்தது இல்லை.
உதயநிதி ஸ்டாலின் நேர்மையானவர். தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூலம் பல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். லோகேஷ் கனகராஜ் வாத்தியாராக மாற வேண்டும். நிறைய கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொடுக்கும் போது தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆரோக்கியமான விமர்சனங்களையும் தட்டிக்கொடுக்கும் பாராட்டுகளையும் ஊடகங்கள் தந்திருக்கின்றது. தரமான சினிமா எடுக்க வேண்டியது நம் கடமை என பேசியுள்ளார்.