Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது… மனைவியை கொடூரக்கொலை செய்த கணவன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

வெளிநாட்டில் பணிபுரிந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன். இச்சம்பவத்தின் பரபரப்பான பின்னணி வெளியாகி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம், மோனிப்பள்ளியை சேர்ந்த மெரின் ஜாய் என்பவருக்கு 26 வயது. இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது, திடீரென மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் பிலிப்மேத்யூ (34) என்ற நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணினுடைய கணவர் என்பது  தெரியவந்தது. இது பற்றி போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், ” மெரரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தி இருக்கிறார். இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து சென்ற போதும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்” என கூறினார். இந்த தம்பதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் சென்ற  வருடம் முதல் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின்  மற்றும் அவரின் தாய் பிலிப்பை காணவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், பிலிப் தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருந்தும் கடந்த திங்கள் கிழமை  “குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள்” என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட பிலிப் மறுநாள் காலை  வேலை முடித்துவிட்டு வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்தி கொலை செய்ததாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |