Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்களை ஏமாற்றி…. சாமர்த்தியமாக ஆட்டையை போட்டு கும்பல்… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சையில் காரில் இருந்த கைப்பையை ,நூதன முறையில் கொள்ளையடித்த நபர்களை பற்றி  போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

தஞ்சை மாவட்டத்தில் விளார்சாலை காயிதேமில்லத் நகரின் 18வது தெருவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் குடும்பத்துடன் காரின் கோவைக்குச் சென்று, நேற்று முன்தினம் இரவு தஞ்சைக்கு திரும்பினார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு, அவரும் அவர் சகோதரியும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காரி அவரது மனைவியும், தாயாரும் காரின் உள்ளே அமர்ந்திருந்தன. இருவரும் காரில் தனியாக இருந்த நிலையில் ,2 வாலிபர்கள் காரின் கீழே 10, 20 ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு, காரில் இருந்த பெண்களிடம் பணம் கீழே விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் இரு பெண்களும் கீழே விழுந்துள்ள பணத்தை எடுக்கச் சென்றபோது காரின் உள்ளே அவரின் சகோதரிக்கு சொந்தமான கைப்பையை திருடிக்கொண்டு ,அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர். ஓம் பிரகாஷும் ,அவரது சகோதரியும் சாப்பிட்டுவிட்டு காரில் பார்த்தபோது கைப்பை திருடி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பையில் 14 பவுன் நகை ,ரூபாய் 5000  இருந்தது .இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ,அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Categories

Tech |