Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கடலை மாவு சட்னி… சப்பாத்திக்கு ஏத்த சைடிஷ்…!!!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே ஏத்த ஒரு சைடிஷ் தான்கடலை மாவு சட்னி. அது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

கடலை மாவு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு                  – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்                    – 3/4 டீஸ்பூன்
தண்ணீர்                            – 1 கப்
கொத்தமல்லி                 – சிறிது (நறுக்கியது)
உப்பு                                      – சுவைக்கேற்ப
வெங்காயம்                    – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி                             – 1 (நறுக்கியது)

தாளிப்பதற்கு தேவையானவை:

கடுகு                              – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு          – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்       – 1
கறிவேப்பிலை         – சிறிது
எண்ணெய்                 – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின் அதன்னுடன் வெங்காயம், தக்காளி, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும்.  பின்பு மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.

பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையானகடலை மாவு சட்னி தயார்.

Categories

Tech |