தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ,ரூ 50,000 மேல் பணம் எடுத்து செல்பவர்கள்,உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பணம் ,பரிசுப் பொருள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படைகள் ,அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிபட்டி சோதனையில் ஈடுபட்டனர் .
அங்கு வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். மொபட்டை ஓட்டி வந்த காரைக்குடிக்கு அடுத்துள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்த வைரவபிரகாஷ். இவரிடம் ரூபாய் 17 லட்சத்து 19 ஆயிரம் பணம் இருந்துள்ளது. ஆனால் அந்தப் பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், இந்தப் பணத்தை சிவகங்கை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.