Categories
உலக செய்திகள்

13 நாட்களில் கொரோனாவை வென்ற 100 வயது முதியவர்..!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.

இதனிடையே பிப்ரவரி 24 ஆம் தேதி  முதியவர் ஒருவர் ஹூபே மாகாணம் வூஹான் நகர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 100 வயதான அந்த முதியவருக்கு கொரானா தொற்று தவிர, அல்சைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவையும் இருந்துள்ளன.

தொடர்ந்து அந்த முதியவருக்கு, 13 நாட்களாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்றங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரோனா வைரஸை வென்ற மிக வயதான நபர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Categories

Tech |