மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில், இயற்கை நீதியை மீறிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும், கல்லூரி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். புகாரளித்த சிறுமி வீர தீர செயலுக்கான தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.