Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு போன் வேணும்… மறுப்பு தெரிவித்த தாய்… சண்டை போட்டு விட்டு மகன் எடுத்த சோக முடிவு..!!

தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி சண்டை போட்டுள்ளார் பிரதீப்.  தாய் மொபைல் வாங்கி தர மறுத்ததால் மாணவன் பிரதீப் கோபப்பட்டு கொண்டு தன்னுடைய துணிகளுடன் தனது அண்ணன் மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு திண்டுக்கல் இரயில் நிலையம் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர், பிரதீப்பின் நண்பர்கள் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளனர். இதனிடையே வீட்டுக்கு வந்ததும் மீண்டும் இது தொடர்பாக தாயுடன் சண்டைபோட்டு விட்டு, நேற்று முன்தினம் (ஜூலை13) வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார்.

வெளியில் சென்ற பிரதீப் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவனை இரவு முழுவதும் அவரது தாயார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காந்திகிராமம் ரயில்வே கேட்டிற்க்கும், அம்பாத்துரை இரயில் நிலையத்திற்கும் இடையே திண்டுக்கல்- மதுரை செல்லக்கூடிய தண்டவாளத்தில் பிரதீப் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |