கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நெடுமன்னா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் என்.கே முரளிதரன் (56) என்பவர் 13 வயது சிறுமியை பலமுறை மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முரளிதரனை காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முரளிதரனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். இந்நிலையில் சிறுமியை மிரட்டியதற்காக 2 பிரிவுகளின் கீழ் 7 வருடங்கள் சிறை தண்டனையும், மற்ற சித்திரவதைகளுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது தான் தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்