Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாயின் தவறான நடத்தை… குழந்தை பெற்ற 14 வயது சிறுமி… 4 பேர் அதிரடி கைது… அதிரும் நாகை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில்  14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கின்ற மணல்மேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இச்சிறுமி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியின் சகோதரி கணவரான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சிறுமியிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை பேசி பலமுறை தகாத உறவு கொண்டதால், சிறுமி கர்ப்பம் அடைந்த காரணத்தால் சிறுமியைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.. இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார்.

மேலும் பல்வேறு பிரமுகர்கள் சிறுமியிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால் தினேஷ் மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய  தினேஷ்(28), ராஜ்(24), ராதாகிருஷ்ணன்(73), செந்தில்குமார்(47) ஆகிய  நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி கிராம மக்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, “சிறுமியின் தந்தை கலியமூர்த்தி சென்ற 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி மாரியம்மாளின் தவறான நடத்தையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் மாரியம்மாள் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு மூன்று பெண்குழந்தைகள் உள்ள நிலையில் முதல் இரு பெண்களுக்கும் திருமணம் ஆகி உள்ளது. மூன்றாவது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்டு தாயின் தவறான வழிகாட்டுதலால் சிறுமி பல்வேறு நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளார்” என தெரியவந்துள்ளது.

Categories

Tech |