14 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்து மேடு தெருவில் வசிக்கும் அசாருதீன் என்பவர் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசாருதீன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை அவரின் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.