Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆளில்லாத நேரம் பார்த்து… 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவனை கைது செய்த போலீஸ்..!!

6 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்..

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், இதே கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதையடுத்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார்.. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிறுவன் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |