ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்திருக்கும் சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள்ளார்.. சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சில மணி நேரங்களாக தேடிவந்த நிலையில் தான், கைகள் அறுபட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்..
இதனையடுத்து சிறுமியை உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியை பழைய பொருட்கள் அங்காடி வைத்திருக்கும் சுனில் என்பவன் காலை நேரத்தில் வந்து தன்னை சந்திக்குமாறு போன் செய்து அழைத்ததாகவும், பிறகு தன்னை வலுக்கட்டாயமாக சந்தையின் அடித்தளத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்..
தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.. கொடூரன் சுனில் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் தப்பியோடிய சுனிலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்