தாய்லாந்தில் 17 வயது மாணவி ஒருவர் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் 17 வயது மாணவி நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் “பணம் மற்றும் நகைகளை இந்த பையில் போடு என்றும் உன் உயிர் உன் கையில் என்றும்” எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு உயிர் பயத்தில் மாணவியின் பையில் அந்தப் பெண் நகைகள் மற்றும் பணத்தை போட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் மாணவி பறித்த பணம் மற்றும் நகைகள் 400,000 baht (ரூ.24,22,289.14) மதிப்பு இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த 17 வயது மாணவி நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் கடையின் மேலாளர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
அப்போது ஓடி வந்து கொண்டிருந்த அந்த மாணவியின் முன்னர் அங்கிருந்த நபர் ஒருவர் தனது காலை நீட்டியுள்ளார். இதையடுத்து கீழே விழுந்த அந்த மாணவியை அங்கிருந்த மக்கள் அனைவரும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில அந்த மாணவி ஆன்லைன் முதலீட்டில் பெரும் தொகையை இழந்ததும், குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதால் இவ்வாறு செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த மாணவி பணம் மற்றும் நகை பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.